Tuesday, June 15, 2010

ஒரு நாளில்....

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
( life will not leave you in just one day )
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
( the next day the sadness might not prevail )
எத்தனை கோடி கண்ணிர் மண் மீது விழுந்திருக்கும்
( how many crores of tears have fallen on this earth )
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
( this earth is fruitful even after seeing all those )
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
( after leaving the black gates(womb))
ஒரு வாசல் தேடியே விளையாட்டு..
( in search of a single way )
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
( choas when i open my eyes )
கண்மூடி கொண்டால்..
( only if i could close my eyes )

போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
( Born in a battlefield, who cares about life and death )
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
( Living in a forest, the pain of thorns is not death )
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
( Walking in the darkness, even your shadow leaves you )
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
( You will understand the truth that you are the only company for yourself )

தீயோடு போகும் வரையில் , தீராது இந்த தனிமை
( Until we burn in the ashes This loneliness will not leave)
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
( Hoping to see shore, we keep sailing in the ship )
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
( We will wage a war even if a volcano erupts over us )
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
( We could understand God's plan )
இங்கு எதுவும் நிலை இல்லை கரைக்கிறதே
( Nothing is permanent in this world )
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
( My mind is wandering aimlessly )
அந்த கடவுளைக் கண்டால்
( If only I could see the God)

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு
( The mind says, that is mine and this is yours )
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு
( The mind haggles, She is mine and she is yours )
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
( This is neither yours nor mine )
படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்
( The creator will take everything )
நல்லவன் யாரடா கெட்டவன் யார்
( Who is good, who is bad )
கடைசியில் அவனே முடிவு செய்வான்
( He will decide that )

பழி போடும் உலகம் இங்கே , பலியான உயிர்கள் எங்கே
( The world keeps blaming, Where did the sacrificed souls go )
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
( We will be standing at worlds end, watching everything )
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
( We will act along as if the entire world is a drama )
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம் ..
( We need a lot of faces, yes, we'll wear them )
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம். .
( There are a lot of turns, yes, we'll turn )
கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்.
( Let us finish the story as it goes )
மறு பிறவி வேண்டுமா?
( Do we need another life)-Yuvan Voice

Friday, March 26, 2010

தயவு செஞ்சு இத யாரும் படிக்காதீங்க...

உனக்காய் ஒரு முறை
எனக்காய் ஒரு முறை
என சாதம் ஊட்டினாய்
குழந்தையில்...
ஒரு கல் தடுக்கினாலும்
பார்த்து என
பதறினாய்
பள்ளியில்...
ஒரு விழி மூடியும்
மறு விழியில்
ரசித்தாய்
பருவத்தில்...
ஒரு கன்னத்தில் முத்தமிட
மறு கன்னம் காட்டினாய்
காதலில்...
ஒரு விழி அழுதிட
மறு விழி மறைத்திட
மணந்தாய்
மற்றொருவனை...

ஒரு கையில் குழந்தையும்
ஒரு கையில் பெட்டியும்
என கடந்தாய்
என் கல்லறையை...